" "" "

இந்த மாதிரி ஆண்கள் மனைவியுடன் மிருகங்களை போல உடலுறவு கொள்பவர்களாம்! அப்போ நீங்கள் எந்த மாதிரி?

இல் வாழ்க்கை – இது வெறுமனே உடலுறவு சார்ந்த ஒன்று என்றால் கிடையவே கிடையாது. தம்பதிகள் பரஸ்பரம் தமக்குள் அன்பைப் பரிமாறிக் கொள்வதும், தம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், மனசு விட்டு ஒருத்தர் கூட இன்னொருத்தர் பேசுவதற்கும் இவ் இல் வாழ்க்கை இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

காதல் திருமணம் செய்யும் தம்பதிகள் திருமணத்திற்கு முன்பதாகவே ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு, மனம் விட்டு பேசிக் கொள்வதால், தமக்குப் பிடித்த வகையில் தம் வாழ்க்கையினை அமைத்துக் கொள்கின்றார்கள், ஆனால் பெற்றோரினால் ஏற்பாடு செய்யப்படும் திருமண பந்தத்தில் – அரேஞ்ச் மாரேஜ்ஜில் இணைந்து கொள்வோர் நிலை? பல வெளியே சொல்ல முடியாத வேதனைகளை கொண்டுள்ளதாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.

நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும், திருமணத்தின் பின் காதல் செய்யலாம் எனும் வகையில் பல தம்பதிகள் தமது துணையுடன் அன்பாக இருந்தாலும், இந்த டிஜிட்டல் உலகிலும் இப்படியான மிருகங்களைப் போன்று “தமக்கெல்லாம் எப்போது உடலுறவு கொள்ள வேண்டுமோ” அந்த நேரத்திற்கு மட்டும் மனைவியை நாடும் கணவர்களும் உண்டு. இயந்திரமயமான வாழ்க்கை, பெற்றோர் முறைப்படி திருமணம், நகர்ப் புற வாழ்க்கைக்கு புறம்பாக, கிராமத்தில் மாமனார் மாமியாருடன் கூட்டுக் குடும்பம், கட்டாயப்படுத்தப்பட்ட சிறை வீட்டு வாழ்க்கை , வீட்டுக்கு வரும் விருந்தினர் முன் மரியாதைக் குறைவாக மனைவியை தரம் தாழ்த்தி பேசும் கணவரின் கொடூர செயல், தம் ஆசைகள் விருப்பங்களை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பெண்கள், அன்பாய் காது கொடுத்து கேட்காத கணவன், என இன்றும் பல பெண்கள் நம் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆம், என்ன தான் பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்தாலும், நம் வாழ்க்கையிலும் “சமைச்சுக் கொண்டிருக்கிறப்ப பின்னாடி ஓடி வந்து கணவன் கட்டி அணைக்க வேண்டுமே” என்று ஏங்கும் பெண்களும், காலையில் ஒரு பெட் காப்பி போட்டு தந்தா நல்லா இருக்குமே என்று தவிக்கும் பெண்களும், கை கோர்த்துக் கொண்டு ஒரு சினிமா, ஜாலியா வருடத்தில் ஒரு தரம் ஒரு ஹனிமூன் சுற்றுலா, தம் மன உடல் வலிகளைப் பகிர்ந்து கொள்ளவதற்கேற்ற கணவன் இல்லையே என அன்பிற்காய் ஏங்கும் பெண்களும் நம் சமூகத்தில் இன்றும் வாழ்கிறார்கள். இது இவர்களின் தவறா என்றால் கிடையவே கிடையாது. அவர்கள் கணவரின் தவறு என்றே சொல்லலாம். காரணம்?

இரவில் வேலை முடிந்து வந்தாலும் நீ சாப்பிட்டியா என்று கூட கேட்காமல், சாப்பிட்டு விட்டு மொபைல் போனில் வாட்ஸ் அப் குறூப்களிலும், கேம் விளையாடுவதிலும் இப்போதும் 15 வயது குழந்தைகள் போல இல் வாழ்க்கை என்றால் என்னான்னே தெரியாது நேரத்தை செலவழிக்கும் கணவன்மாரும் உண்டு! மனைவியின் தேவைகளை புரிந்து கொள்ளாத கணவன், நாம என்ன தான் நவீன உலகம் என்று பேஸ்புக்கில வாற பெண்ணுரிமை பற்றிப் பேசும் பதிவிற்கு கமெண்ட் செய்து, லைக் செய்து நாம் வீர புருஷர்கள் என்று சொன்னாலும், நம் வீடுகளிலும் இப்படியான அசிங்கம் நிகழ்கிறதே என்பது உண்மை. ஆடவன் ஒருவன் எப்போது தன் மனைவியை தனக்குச் சமனாய் – சரி நிகராய் சம உரிமையுடன் பழகுகிறானோ நிச்சயமாக அவன் தான் பெண்ணைப் போற்றக் கூடியவன், தன் தாய்க்கு கொடுக்கும் அதே சமனான மரியாதையினை – மதிப்பினை தன் தாரத்திற்கும் வழங்க கூடியவன்.

ஆனால் பல ஆண்களிடம் அந்தப் பண்பு இருப்பதே இல்லை. இந்த டிஜிட்டல் உலகிலும் , மனைவி என்ன தான் படித்திருந்தாலும் திருமணத்தின் பின்னர் வேலைக்குச் செல்லக் கூடாது, வீட்டினுள் இருக்கனும், மனைவி காலையில் காப்பி கொடுப்பதற்கும், துணி துவைப்பதற்கும், வேளா வேளைக்கு சமைத்துக் கொடுப்பதற்கும், தனக்கும் தன் வம்சத்திற்கும் பேர் சொல்லும் குழந்தையினை ஈன்றெடுப்பதற்கும் , எப்போதெல்லாம் உணர்ச்சி வருகிறதோ அப்போது மட்டும் அவள் என்ன மாதிரியான மன நிலையில் இருந்தாலும் உடலுறவிற்கான எந்திரமாக இருக்க வேண்டும் என்று தான் பல ஆண்கள் ஆணாதிக்க கீழ்த்தரமான – மிகவும் கேவலமான சிந்தனையில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பல பெண்கள் இந்த மாதிரியான கொடூரங்களை வெளியே சொல்ல முடியாது இன்றும் மனச் சிறைக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நிஜம், காலையில் வேலை, வேலைக்கு போனா “என்னங்க நல்லா இருக்கீங்களா” என்று மெசேஜ் அனுப்பினால் கூட எரிந்து விழும் கணவன், அப்புறமாக, வீட்டிற்கு வந்ததும், குழந்தை இருந்தால் குழந்தையுடன் மட்டுமே அன்பாக பேசி விட்டு, குட்நைட் கூட சொல்லாமல் கட்டி அணைத்து முத்தம் கூட வழங்காமல் தூங்கச் செல்லும் கணவன் – இப்படித்தான் இன்றும் ஆணாதிக்க வட்டாரத்தினுள் அகப்பட்ட பல பெண்களின் வாழ்க்கை!!

மனைவி என்பவள் யார் – தாய்க்கு நிகராய் நம்மில் பாதியாய் என்று சினிமா வசனம் பேசினாலும், அது அரேஞ் மாரேஜ் ஆக கூட இருந்தாலும், அவ்வபோது இன்பத்தையும், துன்பத்தையும் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்றவளாய் நம்முடன் கூட இருக்கிறாளே என்று யாரும் நினைப்பதில்லை. அப்படி நீங்கள் நினைத்து உங்கள் வாழ்வில் சரி பாதி “நீ பாதி நான் பாதி கண்ணே” எனும் அந்தஸ்து கொடுப்பவராக இருந்தால் நீங்கள் தான் Such a great person” என்று சொல்லுகிறது வாழ்வியல்.

ஆக நமக்கெல்லாம் எப்போது உணர்வு வருகிறதோ, அப்போது வந்து நீ கட்டிலில் அமர்ந்து கொள், என் கழிவு அனைத்தையும் கொட்டி விட்டு, உனக்கு ஒற்றை முத்தம் கூட வைக்காது, உறவில் உனக்குத் திருப்தியா என்று கூட கேட்காது, ஏன் எந்த வித இதர தீண்டல்களையும் செய்யாது ஒரு ஆண் தன் உறவை முடிப்பவன் ஆயின் அவன் ஹிட்லர் போன்ற கொடூரனுக்குச் சமம் என்று கூறுகிறது கிரேக்கிய இலக்கியம்.

அவ்வப் போது செல்லச் சீண்டல், சின்னதாய் கோபம், அவளின் தேவைகள் என்ன? அவனின் தேவைகள் என்ன? நண்பர்களாய் அன்போது பேசி, செல்லமாய் கூப்பிட்டு சின்னதாய் சிரித்து, வாழ்வில் வரவு முதல் செலவு வரை, நன்மை முதல் தீமை வரை என்று ஒரு பெண்ணுடன் ஆண் பழகுவானாயின் அவனே இவ் உலகில் உயர்ந்தவன். ஏனையோர் எல்லாம் காட்டுமிராண்டிகளாம். தம் தேவைக்காக மிருங்களைப் போன்று புணர்தலை மட்டும் குறிக்கோளாக கொண்டு பெண்ணை அடிமையாக – வீட்டு வேலைக்காரியாக நடத்தும் மிகக் கேவலமான மிருகங்கள் என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இப்போ சொல்லுங்கள் நீங்கள் இந்த விடயத்தில் எந்த ரகம்?

வெறும் செக்ஸ் மட்டும் தான் வாழ்க்கை இல்லை, வாழ்வின் சரி பாதியாய் தன் துணை மீது அன்பு செலுத்துவதும், மனம் விட்டு பேசுவதும், ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாய் இருப்பதும் தான் வாழ்க்கை என நீங்கள் நினைத்தால் இந்த நல்ல கருத்துக்களைத் தாங்கிய பதிவினை உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள், இதுவரை காலமும் மிருகம் போன்று நீங்கள் நடந்து கொண்டால், இப்போதாச்சும் கொஞ்சம் கொஞ்சமாய் உங்களைத் திருத்திக்க இந்தப் பதிவு உதவுமாயின் நமக்கும் சந்தோசமே!!

புரட்சி வானொலிக்காக நிரூபன்.