இமைகள் உதிர்கிறதா.!? என்ன செய்தாலும் புருவம் அடர்த்தியாக வளருதில்லையா..!? இத ஒரு முறை முயற்சி செய்யுங்கள் அதன் பின் பாருங்கள்…!

முகத்தில் முக்கியமானது கண்கள் தான். இது கவர்ச்சியாக இருந்தால், முகம் வசீகரமாக இருக்கும். இந்த கண்களை அழகாக்குவதில் புருவத்திற்கும் பங்குண்டு. சிலருக்கு புருவ முடி அடர்த்தியாக இருக்காது. இந்த புருவங்கள் சரியாக வளராமல் இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில தான் உடலில் சரியான ஹார்மோன் சுரப்பி சுரக்காமல் இருப்பது, போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதது தான். இந்த புருவங்களை அடர்தியாக்க என்ன செய்யலாம்??

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

மற்றைய எண்ணெயை விட ஆமணக்கு எண்ணெயில் அதிகளவான சத்துக்கள் உள்ளது. கூந்தல் வளர்ச்சிக்கு மிக முக்கியமன எண்ணெயாக கருதப்படுகிறது. விளக்கெண்ணெயை கொண்டு மசாஜ் செய்து விட்டு, பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கிளின்சரை சேர்த்து, அதில் புருவங்களை கழுவ வேண்டும். இதை தினமும் செய்தாலும் புருவம் வளரும்.

புருவம் அடர்த்தியாக வளர தேங்காய் எண்ணெயினுள், எலுமிச்சை தோலைப்போட்டு, ஊறவைத்து எடுக்கவும் . இந்த எண்ணெயை இரவில் புருவத்தில் பூசி படுக்கலாம். இதை பூசும் போது எரிச்சல் ஏற்பட்டால், காலையில் பூசி 10 நிமிடம் விட்டு கழுவவும். இதை பூச முதல் வெயிலில் போகக்கூடாது..

தினமும் கற்றாழை ஜெல்லை இரவில், பூசிப்படுத்தால், புருவம் வளரும். இதை புருவம் மெல்லிசாக இருப்பவர்கள் செய்யலாம். இது சருமத்திற்கும் சிறந்தது.வெங்காயம் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கக் கூடியது. வெங்காய சாற்றை , எடுத்து இரவில் புருவத்தில் பூசி காலையில் கழுவினால் தான் முழுபயனை அடையலாம்.

வெந்தயத்தை அரைத்து பூசி வந்தால் புருவம் நன்கு வளரும். மற்றும் பாதம் எண்ணெயை இரவில் பூசி தூங்கினால் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் இருக்கும்.அரவில் தூங்க முதல் பாலை புருவத்தில் பூசினாலும், பால் பொருட்களில் அதிகமான அளவில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் இருக்கின்றன.