தமிழகத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது..!!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஆங்க ஆங்கே பல மாவட்டங்களில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது. கடந்த 3 தினங்களாக கடும் வெய்யில் சுட்டெரித்த நிலையில் அங்கு மீண்டும் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. குறிப்பாக, அம்மாபேட்டை, பழைய பேருந்து நிலையம், அழகாபுரம், கன்னங்குறிச்சி, சூரமங்கலம் போன்ற இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்துள்ளது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

ஆத்தூர் பகுதியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், வீதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீர் செல்ல வழியில்லாமல், முக்கிய வீதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்தனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர். வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, மகாராஜாபுரம், மல்லி, கோபாலபுரம் போன்ற பல இடங்களில் பெய்த மழையால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு மழை கொட்டி தீர்த்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நாவினிபட்டி, சூரக்குண்டு, மில்கேட், எட்டிமங்களம் போன்ற பல இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது. இந்த மழையால், பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பும் என விவசாயிகள் நம்பிக்கை குறியுள்ளனர்.