சென்னையில் காற்று மாசு ஏற்படுவதற்கு காரணம் என்ன???

வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாக்கத்தாலும் மனிதர்களின் அன்றாட செயல்களால் சுற்றுச்சுழல் மாசடைந்து வருகின்றது. வாயுக்களின் இந்த சமச்சீர்நிலை மாறாமல் இருக்கும் வரையில் வளி மண்டலம் எந்தவித பாதிப்பும் அடையாது. தொழில் மயமாதல், நவீனமயமாதல் முதலியவற்றால் வளி மண்டலமானது பாதிப்படைகிறது. இதனால் காற்று மாசடைந்து வருகின்றது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

கடந்த 3 தினங்களாக சென்னையில் காற்றின் வேகம் முற்றிலுமாக குறைந்து காணப்படுவதால் காற்று மாசு நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை உடன்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தமிழகத்தின் தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் கூறியுள்ளார்.

சென்னையில் ஏற்பட்டுள்ள புல்புல் புயலானது தற்போது அதிதீவிர புயலாக மாறி உள்ளதால் மீனவர்கள் அடுத்த 2 தினங்களுக்கு கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர். சென்னையில் புகை மூட்டம் நிலவுவது தொடர்பாக தெரிவித்த புவியரசன், வழக்கத்தை விட காற்றின் வேகம் முற்றிலுமாக குறைந்து காணப்படுவதால் நாம் சுவாசிக்கும் காற்று, தொழிற்சாலை மற்றும் வாகனங்கள் வெளியிடும் புகையினால் அசுத்தப்படுத்தப்படுகின்றது, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நைட்ரஜன் மற்றும் கந்தக ஆக்ஸைடுகள், பெட்ரோல் சுத்திகரிப்பு, மற்றும் வாகனங்களிலிருந்து வெளிவரும் கார்பன் மோனாக்ஸைடு போன்றவற்றில் இருந்து வெளிவரும் புகை, கடல் மட்டத்தில் இருந்து 700 மீட்டர் தொலைவில் வளிமண்டலத்திற்குள் நீடிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால், பனி மூட்டம் போல் புகை காட்சியளிப்பதாகவும், காற்றின் வேகம் அதிகரிக்கும் போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.