இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு மக்களுக்கு விடுத்த முக்கிய அறிவிப்பு..!!!

நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் இன்று இந்திய உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த அயோத்தி வழக்கில் உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கினாலும் அனைத்து மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட கருத்து என்னவென்றால், அயோத்தி வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு யாருக்குமான வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்கக் கூடாது என கூறியுள்ளார். இந்தியாவின் பெருமை மிகு பாரம்பரியங்களான அமைதி, ஒற்றுமையை மேலும் பலப்படுத்தும் வகையில் மக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவின் ஒற்றுமை, சுதந்திரம், அமைதி சமத்துவம் போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அந்நாட்டு மக்களை பிரதமர் மோடி அன்பாக கேட்டுக்கொண்டுள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!