தமிழகத்தில் தொடரும் துயரம்… பலத்த மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழப்பு..!!!

கோயம்பத்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்த காரணத்தால் வீடு இடிந்து விழுந்ததில் 08 பேர் பரிதாபமாக பலியான நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

மேட்டுப்பாளையம் பகுதியில் நாடூர் கிராமத்தில் பலத்த மழை பெய்ததால் பல வீடுகள் இடிந்து விழுந்தான. இந்த கொடூர சம்பவம் இன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை நடந்துள்ளது. வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

அந்த இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள், 10 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என 15 உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டுள்ளனர்.  இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அடுத்து, வீட்டில் இருந்த 03 பேரை தேடும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. மேட்டுப்பாளையத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 180 மிமீ மழை பொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.