நடிகை அஷ்ரிதா ஷெட்டியை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே..!!! திருமணப் புகைப்படங்கள் இதோ..!!

இன்றைய தினம் தமிழ் படங்களின் மூலம் பிரபல்யம் அடைந்த நடிகை அஷ்ரிதா ஷெட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே திருமணம் செய்துள்ளார். துளு, உதயம் NH4, ஒரு கன்னியும் மூனு களவாணிகளும், இந்திரஜித் போன்ற தமிழ் படங்களின் மூலம் சினிமா உலகில் பிரபல்யம் அடைந்து மக்கள் மனதில் இடம் பிடித்த வருகின்ற 26 வயதுடைய அஷ்ரிதா ஷெட்டி என்ற பிரபல நடிகை தற்போது ‘நான் தான் சிவா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

நடிகை அஷ்ரிதா ஷெட்டியும் இந்திய கிரிக்கெட் வீரரான மனிஷ் பாண்டேவும் நீண்ட காலமாக உயிருக்கு உயிராக காதலித்து வருவதாக பல்வேறு செய்திகளில் வெளிவந்தாலும், ஒருமுறை கூட இருவரும் வாய் திறந்து கூறாததாலும் இருவரையும் வெளியில் ஒன்றாக காணாததாலும் இந்த தகவலை உறுதி செய்ய முடியாத செய்தியாகவே இருந்து வந்தது.

மேலும் இந்த நிலையில் இருவருக்கும் தற்போது தென்னிந்திய முறைப்படி திருமணம் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது. நேற்றைய தினம் தமிழகத்திற்கு எதிராக இடம்பெற்ற சையத் முஷ்டாக் அலி போட்டியில், தனது அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற மனிஷ் பாண்டே, போட்டிக்கு பின்னைய விளக்கக்காட்சியின் போது தனது திருமணத்தைப் பற்றி தெரிவித்துள்ளார்.

“இந்தியா போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு முன், எனக்கு இன்னொரு முக்கியமான தொடர் உள்ளது. நான் நாளை திருமணம் செய்து கொள்கிறேன்”, என்று அவர் உற்சாகமாக தெரிவித்தார். மேலும் இந்த நிலையில் இருவரும் ஒன்றாக இருக்கும் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.