பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி. அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக பாஜக கோரிக்கை…!!!

சென்னை மாவட்டம் புதுக்கோட்டையில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி. அரசகுமார் கலந்து கொண்டு உரையாற்றும் போது எம்.ஜி.ஆருக்கு அடுத்து நான் நேசிக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின். அவர் நினைத்தால் கூவத்தூர் சம்பவத்தின் போதே முதல்வர் ஆக முடியும் ஆனால் அவர் அப்படி செய்ய மாட்டார். அவர் ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார். காலம் வரும், கட்டாயம் மு.க. ஸ்டாலின் முதல் அமைச்சர் ஆவார் என கூறியுள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி. அரசகுமார் பேச்சு தமிழக பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தனது பேச்சு தொடர்பாக பேட்டி வழங்கிய பி.டி.அரசகுமார், என்னுடைய தனிப்பட்ட உணர்வுகளை நான் வெளிப்படுத்தினேன். மு.க. ஸ்டாலினை சாதாரணமாக தான் நான் வாழ்த்தினேன். கட்சி தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதை நான் ஏற்க தயார் என கூறியுள்ளார்.

இது போன்ற நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி கட்சி தலைமைக்கு தமிழக பாஜக கடிதம் ஒன்றை அனுப்பிட்டுள்ளது. தேசிய தலைமையில் இருந்து பதில் வரும் வரை கட்சி சார்பில் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் பி.டி.அரசகுமார் கலந்துக்கொள்ள கூடாது என தமிழக பாஜக தெரிவித்துள்ளார்.