கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வீசிய சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகளை மீட்க அரசு நடவடிவடிக்கை…!!!

இந்தியாவில் கன்னியாகுமரி அருகே உள்ள வல்லவிளையைச் சேர்ந்த 250-க்கும் அதிகமான மீனவர்கள் கர்நாடக மாநிலம் அருகே ஆழ்கடலில் 60-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திடீரென வீசிய சூறைக்காற்றால், படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. கடலில் தத்தளித்த மீனவர்களை அந்த வழியாக வந்த தனியார் வணிகக்கப்பல் மீட்டு, கப்பலிலேயே தங்க வைத்தனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மேலும் இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்களை மீட்டு பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர். அதையடுத்து, கடலில் உள்ள விசைப்படகுகளை கரைக்கு கொண்டு வரும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். படகுகளை மீட்க அரசு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.