மருத்துவமனையில் வைத்து இளம்பெண்ணுக்கு தாலி கட்டி சிறிது நேரத்திற்கு பின் தப்பித்து ஓடிய இளைஞன்..!!!

இந்தியாவில் மருத்துவமனையில் வைத்து இளம்பெண்ணுக்கு தாலி கட்டி சிறிது நேரத்தில் தப்பித்து ஓடிய இளைஞனின் செயலால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்தியாவில் புனேவை சேர்ந்த இளம்பெண்ணும், இளைஞனும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் இளம்பெண் கேட்ட நிலையில் நீ தாழ்ந்த சாதியை சேர்ந்தவள் என்பதால் என்னால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறினார். அதையடுத்து மன வேதனை அடைந்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற நிலையில் பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து பயந்து போன காதலன் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு இளம்பெண்ணுக்கும், குறித்த இளைஞனுக்கும் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் காதலிக்கு தாலிக்கட்டிய சில நிமிடங்களில் அவர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். அதையடுத்து காதல் கணவன் மீது இளம்பெண் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

மேலும் அந்த புகாரில் அதிர்ச்சியான விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார், என்னை காதலிப்பதாக கூறி வற்புறுத்தி அவர் பலாத்காரம் செய்தார், பின்னர் சாதியை காரணம் காட்டி என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். அவரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதையடுத்து இந்த இளைஞரை பொலிஸார் வலைவீசி தேடி வருகிறார்கள்.