" "" "

திருமணமான 4 நாட்களில் மனைவி 2மாதம் கர்ப்பிணி… அதிர்ச்சியில் புதுமாப்பிள்ளை..!!

தமிழகத்தில் திருமணமான 4 நாட்களில் மனைவி 02மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்த புதுமாப்பிள்ளை அதிர்ச்சியடைந்தார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

தமிழகத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவராமன் என்ற இளைஞனுக்கு அவர் பெற்றோர் வெகு நாட்களாக திருமணத்திற்கு பெண் தேடியும் கிடைக்காமல் போயுள்ளது. மேலும் இந்த நிலையில் புரோக்கர் மூலம் வால்பாறையைச் சேர்ந்த மல்லிகா என்ற இளம் பெண்ணை வரமாக பார்த்துள்ளனர்.

வரதட்சணை பெண் வீட்டில் இருந்து தான் கொடுப்பர் அதன் வழக்கம் இங்கு மறக்க பெண் கிடைத்த மகிழ்ச்சியில் திருமணத்துக்காக மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண்ணின் குடும்பத்துக்கு வரதட்சணையாக 12 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் வழங்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் மிக சிறப்பாக திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற பின்னர் புதுமண தம்பதியினர் தேனிலவுக்கு செல்ல ஊட்டி, கொடைக்கானலை தேர்வு செய்தனர்.

இந்த நிலையில் திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் வாந்தி எடுத்தார். அதைக் கண்ட புதுமாப்பிள்ளை புட் பாய்சன் என்று நினைத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு மனைவியை அழைத்து சென்றார். அங்கு புதுப்பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் 2 மாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்று புதுமாப்பிளையிடம் கூற அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மனைவியுடன் வீட்டுக்கு வந்த சிவராமன் பெற்றோரிடம் அனைத்தையும் கூற அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பெண் கிடைக்காததால் அவசர கதியில் விசாரிக்காமல் திருமணம் செய்து கொண்டோமே என்று கவலை அடைந்த சிவராமன் பொலிஸ் புகார் கொடுத்தார்.

சிவராமன் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் பெண்ணின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களிடம் விசாரித்த போது மல்லிகாவுக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும், அதை மறைத்து அவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார் என்றும் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.