" "" "

மகளின் திருமணத்திற்கா‌க வாங்கிய கடன்..! திரும்ப செலுத்த முடியாததால் பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை..!!

சேலம் மாவட்டம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த மணி என்பவர் பால் வியாபாரிய பணியாற்றி வந்தார். இவர் தனது இளைய மகளின் திருமணத்திற்காக ஐந்து லட்ச ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து பணத்தை கேட்டு நெருக்கடி செய்ததாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மணியின் வீட்டை பூட்டி கடனை வசூலிக்க முற்பட்டுள்ளனர்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பேச்சு வார்த்தைக்கு பின் கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் கேட்டு மணி தனது வீட்டின் சாவியை பெற்றுக்கொண்டார். நேற்றைய தினம் நீண்டநேரமாகியும் மணியின் வீடு திறக்கப்படாமல் இருப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சூரமங்கலம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கதவை உடைத்து பார்த்த போது மணி மற்றும் அவரது மனைவி கண்மணி ஆகிய இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தம்பதியினரின் சடலத்தை மீட்டு பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான மணி மற்றும் அவரது மனைவி கண்மணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடன் கொடுத்தவர்களில் நெருக்கடி காரணமாகவே தம்பதியினர்கள் இருவரும் தற்கொலை செய்திருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.