குடும்ப பிரச்சினையால் மாமனாரும் மருமகளும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை..!!!

திருவண்ணாமலை மாவட்டம் அணியாலை கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரின் மகன் குமார் என்பவர் சரியாக வேலைக்குச் செல்லாமல் குடித்து விட்டு சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் இது தொடர்பாக வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன வேதனை அடைந்த குமாரின் தந்தை வேலு, பூச்சிகொல்லி மருந்தை குடித்துள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அந்த கொடூர சம்பவத்தை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார். மாமனார் இறந்த விரக்தியில், குமாரின் மனைவி கலைவாணியும் பூச்சிகொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தால், கலைவாணியின் 2 குழந்தைகளும் தற்போது தாயை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.