" "" "

‘இனி நான் காதலனிடம் பேசமாட்டேன்’ திருநங்கையிடம் கதறிய இளம் பெண்..!!! சேலத்தில் நடந்த கொடூரம்..!!

சேலம் மாவட்டத்தில் காதலனை மறக்க முடியாத இளம் பெண் ஒருவர் பெற்றோரிடம் தனக்கு பேய் பிடித்ததாக கூறி அவர்களை ஏமாற்றி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த இளம் பெண் மற்றும் இளைஞன் ஆகிய இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் லீலையை அறிந்த பெண்ணின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். எனினும் காதலனை மறக்க முடியாமல் தவித்த இளம்பெண், பெற்றோரை ஏமாற்ற முடிவு செய்த நிலையில் பேய் பிடித்தது போல் தலை மயிரை விரித்து விட்டு நடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் கவலை அடைந்த பெண்ணின் பெற்றோர் ன்னங்குறிச்சி மதுரகாளியம்மன் கோயிலில் அருள்வாக்கு கூறும் திருநங்கை மதுரயிடம் அழைத்து சென்றனர். அங்கு, பேய் விரட்டுவதாக கூறி தலைமுடியை இழுத்தும், பிரம்பால் அடித்தும் இளம்பெண்ணை திருநங்கை கொடுமைப்படுத்தினர்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

திருநங்கையின் கொடுமை தாங்க முடியாத இளம்பெண், தமக்கு பேய் பிடிக்கவில்லை என்றும், இளைஞர் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாகவும், அதனால் பெற்றோருக்கு பயந்து பேய் பிடித்தது போல் நடித்ததாகவும் உண்மையை கூறியுள்ளார்.

மேலும் இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காதலனை மறந்துவிடுவதாகவும், அவரிடம் இனி பேசமாட்டேன் எனவும் சூடத்தை அணைத்து வாக்குறுதி கொடுத்தார் அந்த இளம்பெண். சத்தியம் செய்து விட்டு அதை மீறினால் இரத்த வாந்தி எடுத்து மரணம் அடைய நேரிடும் எனவும், இளம்பெண்ணை எச்சரித்து திருநங்கை அனுப்பியுள்ளார். காதலித்த இளம்பெண்ணை அவரது பெற்றோர் இவ்வாறு கண்டித்தால் இந்த விபரீதமான முடிவு எடுத்துள்ள சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Videos & Video Copyrights Owned By: News7 Tamil