" "" "

இந்தியாவில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டங்களில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு..!!!

இந்தியாவில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புக் கூறி நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்து குடியேறிய முஸ்லிம் இல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கு அமைய புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. குறித்த சட்டத்தால் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என வடகிழக்கு மாநிலங்களில் அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 05 தினங்களாக இந்தச் சட்டத்தை எதிர்த்து அங்கு தீவிர போராட்டங்கள் மேற்கொண்டு வருகின்றன.

அசாம், மேற்கு வங்காளம், மேகாலயா மாநிலங்களைத் தொடர்ந்து குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியிலும் போராட்டம் ஆரம்பித்துள்ளன. இவ்வாறு இடம்பெற்ற போராட்டம் ஒன்றில் ஏற்பட்ட வன்முறையில், குறைந்தது 3 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அதைத் தொடர்ந்து பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை தாக்குதல்களை மேற்கொண்டு ஆர்ப்பாட்டங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.