" "" "

2ஆவது திருமணத்திற்கு தயாராகும் கணவன்.. மனைவி எடுத்த விபரீத முடிவு..!! இந்தியாவில் நடந்த சோகம்..!

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் கடலூர் மாவட்டம் கண்ணாரபேட்டை பகுதியை சேர்ந்த 58 வயதுடைய பாவாடைசாமி என்பவரின் மகள் சங்கீதா என்ற இளம் பெண்ணுக்கும், புதுவை பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞனுக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்று சில நாட்களுக்கு பின்னர் ராஜேஷ் சங்கீதா வீட்டினரிடம் வரதட்சணை கேட்டு வந்தார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதனால் (ராஜேஷ்-சங்கீதா) தம்பதியினருக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கணவன் ராஜேஷை விட்டு பிரிந்து தந்தை வீட்டிற்கு சங்கீதா சென்று விட்டார். தொடர்ந்து கணவன்-மனைவி இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இதற்கு இடையில் ராஜேஷுக்கு அவரது உறவினர்கள் 2-வது திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்தனர். இந்த தகவலை அறிந்த சங்கீதா குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை பாவாடைசாமி மற்றும் மகள் சங்கீதா இருவரும் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்துள்ளனர். அதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு அருகில் இருக்கும் சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு ஆரம்ப முதலுதவி கொடுக்கப்பட்டது. அதீத தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் இருவரையும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதைக் கேட்ட உறவினர்கள் அவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இது தொடர்பாக பொலிஸ் புகார் வழங்கப்பட்டது. இருவரின் மரணம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்ட வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.