டெல்லி விமான நிலையத்தில் வைத்து பயணி ஒருவர் கைது…! காரணம் என்ன தெரியுமா??

இந்தியாவின் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரின் பையில் இருந்த பிஸ்கட் மற்றும் கடலை போன்றவைகளை அதிகாரிகள் சோதனை செய்த போது, அதன் உள்ளே சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் மறைத்து வைத்திருந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உலகில் பல்வேறு முறைகளில் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக விலங்குகள், வெளிநாட்டு பணம், நகைகள் மற்றும் தங்கம் போன்றவைகளை நம்பமுடியாத அளவிற்கு மறைத்து வைத்து கடத்தல் கும்பல் கடத்தி செல்லுகின்றன.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அதன் காரணமாக விமான நிலையங்களில், அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதே போன்று இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இருக்கும் Indira Gandhi சர்வதேச விமானநிலையத்தில் நேற்றைய தினம் துபாய்க்கு சுற்றுலா விசா மூலம் பயணிக்கவிருந்த Murad Alam-ன் பையை அதிகாரிகள் சோதனை செலுத்துள்ளனர். அப்போது அவருடைய பையில் இருந்த கடலையை அதிகாரிகள் உடைத்து பார்த்த போது, உள்ளே வெளிநாட்டு பணங்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

குறித்த நபர் கொண்டு வந்த பையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை உடைத்து பார்த்த போது, அதன் உள்ளேயும் வெளிநாட்டு பணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த அதிகாரிகள் முழுவதும் அவருடைய பையை சோதனை செய்த போது, சுமார் இந்திய மதிப்பில் 45 லட்சம் ரூபாய் வெளிநாட்டு பணங்களை பறிமுதல் செய்யப்பட்டது. அந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்ற நிலையில், குறித்த நபரிடம் அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருகின்றனர்.