கட்டாருக்கு செல்லவுள்ள கணவனை வழியனுப்பி வைக்க வந்த மனைவிக்கு ஏற்பட்ட விபரீதம்..!!!

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஸ்னிஜோ ஜோஸ் என்பவர்,பெங்களூரில் பணி புரிந்து தமது மனைவி அனுவின் வருகைக்காக சம்பவதினத்தன்று பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். நிறைய நேரமாகியும் தனது மனைவி அனுவிடம் இருந்து எந்தவொரு தகவலும் வரவில்லை என்பதால், அவரது மொபைலில் தொடர்பு கொண்டார். ஆனால் அவரது மொபைலை எடுத்துப் பேசியவர் சொன்ன தகவலை ஸ்னிஜோவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. தமிழகத்தின் அவினாசியில் குறித்த பேருந்துடன் லொறி ஒன்று மோதியதில், அதில் பயணம் செய்த அனு உள்ளிட்ட 19 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அனு மற்றும் ஸ்னிஜோவுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆகியுள்ளது. சமீபத்தில் தான் இருவரும் டெல்லி மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தேனிவு கொண்டாடிவிட்டு திரும்பியுள்ளனர். அனு பெங்களூருவில் பணியாற்றுவதால், திருச்சூரில் இருக்கும் கணவரை காண சம்பவதினத்தன்று அந்த பேருந்தில் திரும்பியுள்ளார். இதன் இடையில் பேருந்து விபத்து தொடர்பாக தகவல் அறிந்து உடனடியாக அவினாசிக்கு ஸ்னிஜோ விரைந்துள்ளார். அவினாசியில் குறிப்பிட்ட மருத்துவமனைகளை தேடி அலைந்த ஸ்னிஜோ இறுதியில் அனுவின் சடலத்தை மருத்துவமனை ஒன்றில் கண்டுபிடித்துள்ளார். கட்டாரில் பணியாற்றும் கணவர் ஸ்னிஜோவை வழியனுப்பி வைக்கவே அனு, பெங்களூருவில் இருந்து திருச்சூர் திரும்பியுள்ளார். இறுதியில் கணவரை இறுதியாக ஒருமுறை பார்க்காமலையே அனு விடைப்பெற்று சென்றுள்ளது குடும்பத்தாரின் நெஞ்சை உறுக்கியுள்ளது.