திருமணமான பெண் ஒருவர் மீது ஒருதலை காதலால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞன்..! தமிழகத்தில் நடந்த சோகம்..!!

திருமணமான பெண் ஒருவர் மீது ஒருதலை காதலால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞனின் செயல் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த 21 வயதுடைய சலோமி என்ற இளம் பெண் ஒருவர் திருமணமான நிலையில் இவரை பேருந்து நடத்துனர் சுந்தரமூர்த்தி என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். மேலும் இந்த நிலையில் தனது விருப்பத்தை ஏற்க மறுத்த சலோமி மீது பெட்ரோல் ஊற்றி சுந்தரமூர்த்தி தீ வைத்துள்ளார்.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதைத் தொடர்ந்து பலத்த தீக்காயம் அடைந்த சலோமி ஆபத்தான நிலையில் குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சலோமி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பேருந்து நடத்துனர் சுந்தரமூர்த்தியை பொதுமக்கள் பிடித்து பொலிசில் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் பொலிசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.