தாலி கட்டுவதற்கு சற்று முன்னர் மணமகன் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து திருமணத்தை நிறுத்திய மணப்பெண்…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரேலியை அடுத்த மீர் கஞ்ச் பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கு திருமணம் நடைபெறவிருந்தது. இந்த நிலையில், திருமணத்துக்கு முந்தைய நாள் நிகழ்வுகள் கோலாகலமாக இடம்பெற்றது. மறுநாள் காலை மணமக்கள் இருவரும் திருமணத்துக்கு தயாராகி மணமேடையில் நின்றனர். அப்போது மணமகனின் தங்கை மகிழ்ச்சியாக பாடல் ஒன்றிக்கு நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த மணமகன் கோபத்தின் உச்சிக்கு சென்று, அருகில் இருந்த நாற்காலியை எடுத்து தங்கையை தாக்கியுள்ளார்.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மணப்பெண், இவரை திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறி மணமேடையிலேயே மாலையை உதறி விட்டு எழுந்து சென்றுள்ளார். அதன் பிறகு உறவினர்கள் மணப்பெண்ணை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால், அவரோ ஒரு கோபக்காரருடன் தன்னால் வாழ முடியாது. சகோதரியையே இப்படி அடிப்பவர் நாளை தன்னிடமும் இதேபோல் தான் நடந்துகொள்வார். பெண்களை மதிக்காத இந்த நபரால் தன்னால் வாழ முடியாது என கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தின் போது மணமகன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது