யாருக்கும் தெரியாமல் கரு கலைக்க சென்ற மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்…!!! இந்த சம்பவம் எங்க நடந்த தெரியுமா???

கல்லூரி மாணவி காதல் வலையில் சிக்கி கர்ப்பமான நிலையில் கர்ப்பத்தை கலைக்க மருத்துவமனைக்கு சென்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 23 வயதுடைய எஸ்தர் ராணி என்ற இளம் பெண் கல்லூரியில் படித்து வந்தார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை காதலித்து வந்த ராணி அவரால் கர்ப்பமானார். பின்னர் தனது வீட்டுக்கு தான் கர்ப்பமானது தெரிந்தால் பிரச்சினை வரும் என பயந்த ராணி காதலனுடன் சேர்ந்து கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்து யாருக்கும் தெரியாமல் தனியார் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அங்கு கருக்கலைப்பு சிகிச்சையின் போது ராணி உயிரிழந்தார். பின்னர் இந்த சம்பவம் பொலிஸாருக்கு தெரியவந்தால் பொலிசாரிடம் பிடிபடுவேன் என நினைத்த ராணியின் காதலன், ராணியின் சடலம் மற்றும் அவரின் கருவை காரில் வைத்து கொண்டு அங்குள்ள நெடுஞ்சாலைக்கு சென்றார்

பின்னர் ராணியின் காதலன் அவரின் நண்பர்களின் உதவியுடன் ராணியின் சடலத்தின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பி தனது வீட்டுக்கு சென்றுள்ளார். இதனிடையில் தனது மகளை காணவில்லை என ராணியின் பெற்றோர் பொலிசில் புகார் கொடுத்த நிலையில் பொலிசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

அதேவேளையில் தீயில் எரிக்கப்பட்ட சடலத்தை பார்த்து அது ராணி தான் என அடையாளம் கண்டனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையின் பேரில் ராணியின் காதலன் உட்பட சிலரை பொலிஸார் கைது செய்த நிலையில் அவர்களிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.