சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த நாசா முயற்சி…!!!

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் கருவியுடன் தொடர்பை ஏற்படுத்த நாசா முயற்சித்து வருகின்றது. நாசா விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் அனுமதியுடன் லேண்டருடன் தொடர்பினை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அதனை தொடர்ந்து விக்ரம் லேண்டர் கருவிக்கு ரேடியோ அலைகள் மூலம் “ஹலோ” என்ற செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் லேண்டருடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றும் நாசா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சந்திராயன் 2 விண்கலத்தின் மூலம் நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்வதன் முகமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பி வைத்துள்ளனர். இந்த விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு சில மணி நேரங்களில் விக்ரம் லேண்டருக்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இருப்பினும் ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயற்படுவதாகவும், அதன் ஊடாக விக்ரம் லேண்டரை கண்டுப்பிடிக்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் தற்போது விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவ பகுதியில் விழுந்துள்ளதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.