புதர் பகுதியில் இருந்து இளம் விதவைப் பெண் சடலமாக மீட்பு..!! பொலிஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டம் தப்பகுட்டை கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளம் பெண்ணின் கணவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இரு பெண் பிள்ளைகள் மற்றும் மாமியாரோடு வசித்து வந்த    விதவைப் பெண் தனியார் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். கடந்த புதன்கிழமை விதவையின் சடலம் தலையில் அடிபட்ட நிலையில், அங்குள்ள புதர் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

குறித்த விதவைப் பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனையில் அவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் சக பெண் தொழிலாளி ஒருவரின் மகனான 21 வயதுடைய பார்த்திபன் என்ற இளைஞனோடு, விதவை பெண்ணுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

அவ்வப்போது பார்த்திபன் அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று குறித்த பெண்ணிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு பார்த்திபன் கேட்டுள்ளான். பணத்தை தர முடியாது என்று வாக்குவாதம் செய்த அந்தப் பெண், தங்களுடைய தவறான தொடர்பு குறித்த இரகசியத்தை பார்த்திபனின் தாயாரிடம் சொல்லிவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பார்த்திபன், அந்தப் பெண்ணை இழுத்து தள்ளியதில் அருகிலிருந்த கல்லில் தலை மோதி மயக்கமடைந்துள்ளார். அவர் உயிரிழந்து விட்டதாக நினைத்து பார்த்திபன் அங்கிருந்து ஓடிவிட, சிறிது நேரத்தில் அவ்வழியே முழு போதையில் அதே பகுதியைச் சேர்ந்த ரவி மாறும் பழனிசாமி ஆகிய இருவரும் வந்தனர்.

மயங்கிக் கிடந்த அந்தப் பெண்ணின் நிலை தெரியாமல் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதில் மயங்கிய நிலையிலேயே அந்தப் பெண் உயிரிழந்தார். அதை தொடர்ந்து பார்த்திபன், பழனிசாமி, ரவி ஆகிய மூவரையும் பொலிசார் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.