இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு,..!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும், நளினி, சிறை விடுமுறைக் காலத்தை ஒக்டோபர் 15 வரை நீடிக்கக் கோரி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. நளினி தனது மகளின் திருமணத்திற்காக ஒரு மதத்திற்கு சிறை விடுமுறைப்பெற்று கடந்த ஜூலை மாதம் 25-ம் திகதி வெளிவந்துள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அவர், சத்துவாச்சாரியில் தங்கி தினமும் காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகிறார். தன் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால், சிறை விடுமுறை காலத்தை தொடராக் கோரி சென்னை மேல் நீதிமன்றில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை பரிசீலித்த நீதிமன்றம், நளினிக்கு மேலும் 3 வார கால நீடிப்பு வழங்கியது.

இந்த நிலையில், இந்த விடுமுறைக்காலத்தை ஒக்டோபர் 15-ம்; திகதி வரை நீட்டிக்கக் கோரி நளினி சென்னை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்கா ராமன் ஆகியோர் நிராகரித்துள்ளனர். இலங்கையில் இருக்கும் தனது மாமியார் வருவதற்கு தாமதம் ஆவதால், தனது விடுமுறைக்காலத்தை நீட்டிக்கும் படி நளினி கேட்டதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.