கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் என தவறான தகவலை பரப்பிய மக்கள்..! அவமானம் தாங்காமல் இளைஞன் எடுத்து விபரீத முடிவு..!!

இந்தியாவில் மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த முஸ்தபா கேரளாவில் பணியாற்றி வந்த நிலையில் இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கொடிய கொரோனா வைரஸ் பரவி வருகின்ற நிலையில் அதை உடனடியாக கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்கள் கடும் ஊரடங்கு உத்தரவை அறிவிக்கப்பட்டவுடன் மதுரைக்கு வந்து தன்னுடைய தாயாருடன் தங்கியிருந்தார். ஊரிலிருந்து வந்ததில் இருந்தே முஸ்தபாவுக்கு சளி, இருமல், காய்ச்சல் இருந்துள்ளது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதை கண்டு அக்கம் பக்கத்தினர் இவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று கருதி சுகாதாரத்துறை மற்றும் பொலிசாருக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர். அதையடுத்து சுகாதாரத்துறையினரும் விரைந்து வந்து இவரிடம் விசாரணை மேற்கொண்டனர். எனினும் சந்தேகத்தின்பேரில், முஸ்தபாவையும், அவரது அம்மாவையும் 108 ஆம்புலன்சில் ஏற்றி, மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவெடுத்தனர். ஆனால் தகவல் சொல்லி 2 மணி நேரம் ஆகியும், 108 ஆம்புலன்ஸ் வரவில்லை. அதனால் அந்த பகுதி மக்களே ஒரு சரக்கு வாகனம் தயார் செய்து இவர்களை அனுப்பி வைத்தனர்.

அப்படி வண்டியில் ஏறும் போது, முஸ்தாபாவையும் அக்கம்பக்கத்தினர் சிலர் தங்களது செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். அதன் பின்னர் மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் இருவருக்குமே கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். அதன் இடையில், சரக்கு வாகனத்தில் தாயும், மகனும் ஏறிய வீடியோவை அதற்குள் யாரோ சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

அதில் “கொரோனா வைரஸால் பாதித்தவர்” என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோ படுவைரலாக பரவியது. இந்த வீடியோவை முஸ்தபா பார்த்ததும் அதிர்ச்சி அடைந்ததோடு மன வேதனை அடைந்தார். கொரோனா வைரஸ் இல்லாத நிலையில் இப்படி ஒரு வீடியோ வந்தது அவமானமாக நினைத்தார். அதனால் கடுமையான விரக்தியுடன் மதுரையிலிருந்து நடந்தே திருமங்கலம் வந்தார். பின்னர் கப்பலூர் டோல்கேட் தண்டவாளம் அருகே நின்றுகொண்டிருந்தார். எல்லா ரயிலும் ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னையிலிருந்து நெல்லை நோக்கி ஒரே ஒரு சரக்கு ரயில் மட்டும் வந்து கொண்டிருந்தது, திடீரென அந்த சரக்கு ரயிலில் பாய்ந்து முஸ்தபா தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்த பொலிசார் முஸ்தபாவின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.