காதல் நாடகமாடி 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 19 வயது இளைஞன்..!! திருச்சியில் நடந்த பரபரப்பு!

இந்தியாவில் திருச்சி மாவட்டத்திலுள்ள வளவந்தான்கோட்டை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 19 வயதுடைய கிஷாந்த் திருச்சியிலுள்ள கே.கே.நகர் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இந்நிலையில், காமுகன் சிறுமியின் புகைப்படத்தை அனுப்பி வைக்குமாறு, காதல் வார்த்தையை அள்ளி வீசினான். அதில் மயங்கிய சிறுமியும் தனது புகைப்படத்தை அனுப்பி வைத்தார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இந்நிலையில், புகைப்படத்தை மாபிங் செய்து இணையத்தில் வெளியிட்டுவேன் என்று சிறுமியை மிரட்டி, அங்குள்ள பழைய இரயில் நிலையத்திற்கு வரும் படி கூறியுள்ளார். முன்னரே காமுகனால் சிறுமி மிரட்டி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருந்தார். தனக்கு விரைவில் நடக்கும் விபரீதத்தை புரிந்து கொண்ட சிறுமி, இது தொடர்பாக தனது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் அங்குள்ள பொலிஸார் புகார் வழங்கியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புகாரை ஏற்ற பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, கிஷாந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சிறுமியை மிரட்டி காதல் என்ற காமுகன் அரங்கேற்றிய கொடூரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.