google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

ரஷ்யாவுக்கு புறப்பட்ட ஏர் இந்திய விமானிக்கு கொரோனா தொற்று இருந்ததால் பாதியிலேயே மீண்டும் இந்தியாவுக்கு திரும்பியது!

ரஷ்யாவிலுள்ள இந்தியர்களை மீட்பதற்காக மாஸ்கோவிற்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்திய விமானிக்கு கொடிய கொரோனா வைரஸ் தொற்று இருந்ததால் பாதியிலேயே மீண்டும் இந்தியாவுக்கு விமானம் திரும்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விமான சேவைகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வந்தே பாரத் மிஷன் சார்பில் வெளிநாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அதன் ஒரு அங்கமாக ரஷ்யாவில் சிக்கியிருப்பவர்களை அழைத்து வருவதற்காக டெல்லியில் இருந்து ஏர் இந்திய சிறப்பு விமானம் இன்றைய தினம் காலை 7 மணிக்கு டெல்லியில் இருந்து மாஸ்கோவிற்கு புறப்பட்டுள்ளது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

விமானம் நடுவானில்சென்று கொண்டிருந்த போது விமானிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் இது குறித்து தரைக்கட்டுப்பாடு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதையடுத்து தான் விமானிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக விமானத்தை ரஷ்யாவுக்கு செல்லாமல் பாதி வழியிலேயே இந்தியாவிற்கு திருப்புமாறு உத்தரவிடப்பட்டது. அதன் பின்னர் மதியம் 12.30 மணியளவில் டெல்லிக்கு அந்த விமானம் வந்தடைந்தது. குறித்த விமானியுடன் பயணித்த கேபின் மற்றும் காக்பிட் குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைபப்டுத்தப்பட்டுள்ளனர். மாஸ்கோவில் இருந்து இந்தியர்களை அழைத்து வர மற்றொரு விமானம் அனுப்பி வைக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

விமானங்களை இயக்குவதற்கு முன்னதாக டெல்லியில் மட்டுமே சுமார் 200 பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து ஆணைய விசாரணைக்கு உத்தரவிடப்படும் என கூறப்படுகிறது. கடந்த மே மாதம் 7ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வரும் வந்தே பாரத் மிஷனின் கீழ் இதுவரை 45,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம்13 ஆம் திகதி மேலும் ஒரு இலட்சம் பேர் அழைத்து வரப்படுவர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்