சிங்கப்பூருக்கு வருகை தந்த இந்தோனேசிய அதிபர்…!!!

சிங்கப்பூருக்கு இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ வருகை தந்துள்ளார். சிங்கப்பூரில் பெறவுள்ள நடைபெறும் சிங்கப்பூர்-இந்தோனேசியத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கும், இந்தோனேசிய ஜனாதிபதி விடோடோவும் 4 ஆவது முறையாகச் சந்திக்க விருக்கின்றனர்.

இதற்கு முன்னர், சென்ற ஆண்டு அக்டோபர் 11ஆம் திகதி, இரு தலைவர்களும் பாலித் தீவில் சந்தித்துக்கொண்டனர். இருப்பினும் இந்த சந்திப்பின் போது இருதரப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றம் குறித்தும் சென்ற சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட அம்சங்கள் தொடர்பாக அவர்கள் பேசுவார்கள்.

வர்த்தகம் தொடர்பில் மின்னிலக்கத் தகவல் பரிமாற்றத்துக்கான உடன்பாடு கையொப்பமிட்டதை பிரதமர் லீயும், ஜனாதிபதி விடோடோவும் பார்வையிடுவர். சிங்கப்பூருக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் தேசிய ஆவணக் காப்பக ஒத்துழைப்பு தொடர்பான இணக்கக் குறிப்பும் கையொப்பமாக இருக்கிறது. இந்தோனேசிய ஜனாதிபதி அவரது துணைவியார், அந்நாட்டு அமைச்சர் நிலைப் பேராளர் குழுவினர் ஆகியோருக்குப் பிரதமரும் அவரது துணைவியாரும் விருந்தளித்துச் சிறப்பிப்பர்.

சிங்கப்பூர்ப் பேராளர் குழுவில், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட், மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென் உள்ளிட்ட அமைச்சர்கள் இடம்பெறுவர் என்று பிரதமர் அலுவலக அறிக்கை கூறுகிறது.