பாபர் மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு..! 28 வருடங்களாக நடந்த பிரச்சினைக்கு நல்ல தீர்ப்பு வழங்குமா உயர்நீதிமன்றம் ..??

நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சர்ச்சைக்குரிய பாபர் மசூதி வழக்கில் இன்று இந்திய உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்களின் முக்கியமான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இந்து மற்றும் இஸ்லாமிய தரப்புகள் உத்தபிரதேச மாநிலத்தில் அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் விஸ்தீரமான நிலத்திற்கு உரிமை கோரி வருகின்றன. அதற்கு அமைய அயோத்திக்காக சுமார் 28 வருடங்களாக பிரச்சினை நீடித்து வருகிறது.

மேலும் இந்த வழக்கில் கடந்த 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று சமமான பிரிவாக பிரித்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்புகளுக்கு வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்யப்பட்டன.

இந்த பிரச்சினையை சமரசம் மூலம் தீர்த்து வைப்பதற்கு உயர்நீதிமன்றம் முயற்சி மேற்கொண்டது. அதற்கு அமைய எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை குறித்து தீர்ப்பாயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இருப்பினும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

அதையடுத்து இந்த வழக்கை விசாரிப்பதற்காக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் பாப்டே, சந்திரசூட், அசோக் பூசன், அப்துல் நாசர் போன்ற 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உருவாக்கப்பட்டது. அந்த அமர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணை தொடங்கிய நிலையில் தொடர்ச்சியாக 40 நாட்கள் விசாரணை இடம்பெற்று அக்டோபர் 16ஆம் திகதி முடிவுக்கு வந்துள்ளது. மேலும் இந்த நிலையில் இன்று முற்பகல் 10.30 அளவில் சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் இந்திய உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. நீண்ட நாட்களாக அனைவரும் ஆவலுடன் காத்திருந்த பாபர் மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை தொடர்ந்து தீவிர எச்சரிக்கையுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளும் இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.