" "" "

பொலீஸார் மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது, எல்லையில் போராடிய ராணுவ வீரர் ஆதங்கம்..!!

இந்தியா சீனா எல்லையான லடாக் பகுதியில் பணியாற்றி வந்த இராணுவ வீரரான ஸ்டீபன் என்பவரின் தாய் மற்றும் மனைவி கொடூரமாக கொல்லப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலைக்கு நீதி கிடைக்கவில்லை என ஸ்டீபன் பொலீஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

கடந்த ஜூலை மாதம் 14ம் திகதி சிவகங்கை மூடுகூரணி பகுதில் உள்ள ஸ்டீபனின் வீட்டில் வைத்து அவரது மனைவி சினேகா, தாய் ராஜகுமாரி இருவரையும் மர்ம நபர்கள் கொலை செய்ததுடன், அவர்களிடம் இருந்த 58 பவுன் தங்க நகைகளும் கொள்ளை அடித்து சென்று இருந்தனர்.

இந்த சம்பவத்தை விசாரிக்க தனிபடை அமைத்து விசாரணை செய்த போதும் இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப் படவில்லை. இதனால் காவல்துறை மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என ஸ்டீபன் தெரிவித்துள்ளதுடன் பொலீஸார் வெளியே சென்று விசாரிக்காமல் எனது குடும்பத்தினரிடம் மட்டுமே விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொலீஸாரின் இந்த நடவடிக்கை மீதமுள்ள என் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. என்னால் எல்லை பணிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்..!