" "" "

கொரோனா வைரஸிற்காக 24 வயது பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து மாதிரிகள் எடுத்த பரிசோதகர்..!! இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!

இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை பிறப்புறுப்பில் இருந்து எடுத்த சம்பவம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த சுவாதி ( பெயர் மாற்றப் பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப் பட்டது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதனை தொடர்ந்து சுவாதியுடன் பணி புரிந்த 24 வயதான பெண் ஒருவர் தனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என பயந்துள்ளார். இதனால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொரோனா பரிசோதனைக்கு சென்றுள்ளார். இதன் போது மூக்கு அல்லது வாயில் இருந்து மாதிரிகளை எடுப்பதற்கு பதிலாக பிறப்பு உறுப்பில் இருந்து மாதிரிகளை எடுக்க வேண்டும், என கொரோனா பரிசோதகர் கூறியுள்ளார்.

மூக்கு அல்லது வாயில் இருந்து தானே எச்சில் எடுப்பார்கள் என்ச் குறித்த பெண் கேட்ட போது இல்லை தற்போது இப்படி எடுக்கும் படி அறிவிக்கப் பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பெண் பரிசோதனைக்கு ஒத்துக் கொண்டுள்ளார். பரிசோதனை முடிந்து வீட்டுக்கு வந்தவர் சகோதரனிடம் புதிய பரிசோதனை பற்றி கூறியுள்ளார்.

இது பற்றி சகோதரர் வைத்தியர்களிடம் கேட்ட போது அப்படி பரிசோதனை இல்லை என கூறியதை தொடர்ந்து காவல் நிலையத்தில் கற்பழிப்பு புகார் கொடுக்கப் பட்டுள்ளது. பொலீஸார் இதனை விசாரணை செய்து வருகின்றனர்…!!