" "" "

முதலிரவு வேண்டாம் என தள்ளிபோட்டு வந்த புது மாப்பிள்ளை..! பின் தெரியவந்த அதிர்ச்சியான விடயம்..!! வீணாகிப் போன அப்பாவி பெண்ணின் வாழ்க்கை..!!

திருமணம் முடிந்த நாளில் இருந்து முதலிரவை தள்ளிபோட்டு வந்த மாப்பிள்ளையின் சுயரூபம் தெரியவந்ததால் ஒரு பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியான சம்பவம் குண்டூரில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் இளைஞர் ஒருவருக்கு பெற்றோர் மூலம் குண்டூரை சேர்ந்த யுவதி ஒருவரை பெற்றோர் நிச்சயம் செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

நோய்தொற்று காரணமாக அரசால் விதிக்கப் பட்ட கட்டுப்பாட்டுக்கமைய உறவினர் நண்பர்கள் என வெறும் 50 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டனர். வழமை போல் திருமணத்தின் பின் முதலிரவு ஏற்பாடுகள் செய்யப் பட்டது. ஆனால் மணமகனோ திருமண களைப்பு நாளை வைத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இன்று வேண்டாம் நாளை என்றதால் சந்தேகமடைந்த மணப்பெண் தனது தோழிகளிடம் கூறிய நிலையில் தோழிகள் இதனை மணமகளின் பெற்றோர் இடம் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து உடனடியாக மணமகனின் பெற்றோருக்கு அறிவிக்கப் பட்டது. இருவீட்டாரும் மணமகனிடம் இது பற்றி கேட்ட போது தான் உண்மை நிலை தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா மாப்பிள்ளை தனக்கு பெண்கள் மீது ஆசையில்லை என்றும், பெண்ணுடன் உறவு விரும்பம் இல்லாததால் முதலிரவில் இருந்து ஒதுங்கியதாகவும் தெரிவித்துள்ளதுடன் தான் ஓர்பாலின இளைஞர் என்றும் ஏற்கனவே தான் அமெரிக்காவில் இளைஞர் ஒருவருடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர் செய்வதறியாது திகைத்துள்ளனர். ஓர் பாலின சேர்க்கைக்கு இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் அனுமதி அளித்திருந்த போதிலும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பற்றி கவலை படாமல் அமெரிக்கா ரிட்டன் மாப்பிள்ளை திருமணம் செய்ததை பலரும் கண்டித்து வருகின்றனர்..!!