அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; 80 பேர் பலி!

அமெரிக்கப் படைகளின் நிலைகள் மீது 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் வீசியுள்ளது என அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் அமெரிக்கப் படையினர் 80 பேர் பலியாகியுள்ளனர் என பிந்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அமெரிக்கா நடத்திய விமானத்தாக்குதலில் ஈரானின் இராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்ட நிலையில் இரு நாடுகளுக்குமிடையில் போர் வேகம் அதிகரித்துள்ளது. இதனால், இரு நாட்டுத் தலைவர்களும் மாறி மாறி எச்சரிக்கைகளை விடுத்தவண்ணமுள்ளன.

இந்நிலையில், அமெரிக்கப் படைகளின் நிலைகள் மீது 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் வீசியுள்ளது என அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

‘ஈராக்கின் அல்-ஆசாத் மற்றும் இர்பில் பகுதிகளில் முகாமிட்டுள்ள அமெரிக்க விமானப்படைகள் முகாம் மற்றும் அதன் கூட்டணிப் படைகள் மீதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து அமெரிக்கத் தரப்பில் பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஈரானின் இந்தத் தாக்குதலையடுத்து இரு நாடுகளுக்குமிடையிலான போர் வேகம் அதிகரித்துள்ளது. இதையடுத்து உலகளில் பரும் பதற்றம் நிலவுகிறது.