கொரோனா வைரஸில் இருந்து பாதுக்காப்பாக இருக்க “சானிட்டைசர்” ரை நீங்களே தயார் செய்யுங்கள்..! இதோ உங்களுக்காக செய்முறை..!!

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனாவை தடுக்க முடியாவிட்டாலும் பாதுகாப்பாக இருக்கும் படி அரசு எச்சரிக்கை விடுத்து வருகிறது. குறிப்பாக மக்கள் ஒன்று கூடும் இடங்களில் இருக்க வேண்டாம் எனவும், மாஸ்க் அணிந்து செல்லும் படியும் கூறி வருவதோடு வைரஸ் தொற்று பரவாமல் இருக்க சானிட்டைசர் பயன்படுத்தும் படியும் கேட்டுக் கொண்டுள்ளது.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இந்த நிலையில் சானிட்டைசரை தயாரிக்கும் முறையை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இது குறித்த தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்கு கற்றாழை ஜெல் 79ML. Isopropyl Rubbing alcohol ( ஐசோபுரொப்பைல் அல்கோகல்) 161ML. வாசனைக்காக சிறிது வாசனை ஆயில்.

இதனை கொண்டு செய்வதற்கு முன் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய விடயம் ஆல்கஹால் இதில் 99சதவீதமும் கற்றாழை ஒரு சதவீதமும் இருக்க வேண்டும் என்பதாகும். முதலில் சிறிய பாத்திரம் ஒன்றை எடுத்து நன்றாக கழுவி தண்ணீர் சிறிதும் இல்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும். அதே போல் கைகளை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.

இப்போது பாத்திரத்தில் ஆல்கஹாலை போடுங்கள், அதனுடன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலக்குங்கள். இரண்டும் நன்றாக மிக்ஸ் ஆகும் வரை நன்றாக கலக்க வேண்டும். வாசனைக்காக சிறிது வாசனை ஆயில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். இப்போது கலவை தயார். இதனை ஸ்பிரே போத்தல் ஒன்றில் போட்டு நன்றாக மூடிக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் சானிட்டைசரை தயாரித்து விட்டீர்கள். தேவையான போது பயன்படுத்தலாம்…!!