இடித்து அழிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக “முள்ளிவாய்க்கால் நினைவு தூபி” யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் தொடரும் பதற்றம்.!! மிரட்டப் படும் மாணவர்கள்.!!
இலங்கையில் யாழ் பல்கலைக்கழகத்தில் “இறுதிக்கட்ட போரில் உயிர் நீத்த பொது மக்கள் நினைவாக” மாணவர்களால் கட்டப் பட்ட நினைவு தூபி நேற்று இரவு இலங்கை அரசால் இடித்து தரைமட்டமாக்கப் பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் என நேற்றி இரவில் இருந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலரை பொலீஸார் கைது செய்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு எச்சரிக்கையையும் ஒலிபெருக்கி மூலம் பொலீஸார் வெளியிட்டுள்ளனர். இதில் பல்கலைக்கழகத்தின் முன் கூடி போராட்டம் நடத்தும் அனைவரையும் கலைந்து செல்லும் படியும் அப்படி செல்லாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் தெரிவித்துள்ளதுடன்,
போராட்ட களத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் PCR பரிசோதனை நடத்தப் படுவதுடன் 14 நாட்கள் தனிமை படுத்தப் படுவார்கள் என்றும் பயமுறுத்தப் படுகின்றது. துப்பாக்கி ஏந்திய முப்படையினரும் குவிக்கப் பட்டுள்ள நிலையில் நேற்று இரவில் இருந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். எவராலும் கை தொட முடியாது என ஒவ்வொரு தமிழ் மக்களின் மனதிலும் திடமாக இருந்த கனவு யாழ் தற்போது பரிதாபமாக மாறியுள்ளது.
கண்டவரெல்லாம் வந்து கை வைக்கும் நிலைக்கு தமிழ் அரசியல் வாதிகள் ஆக்கிவிட்டார்கள். மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு உதவ இளைஞர்கள் களத்திற்கு சென்றுகொண்டிருக்கும் நிலையில்.. இந்த நினைவு தூபியை இடிக்கும் தீர்மானத்தை யாழ் பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொண்டதாக யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி. சற்குணராஜா தெரிவித்துள்ள கருத்து மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. !!