" "" "

திடீரென தனது பெயரை மாற்றிய ஜனனி ஐயர்.! ஜனனியின் செயலை பாராட்டும் ரசிகர்கள் இதோ அவர் போட்ட பதிவு.!!

அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஜனனி ஐயர். அதன் பின் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தால் கூட பெரிதாக பேசப்படவில்லை. இதனால் பிக் பாஸ் சீசன் 2ல் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்த நிலையில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இருந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று வந்தார்.

இருப்பினும் இறுதியில் சரியாக டாஸ்குகள் செய்யவில்லை என ரசிகர்கள் கிண்டல் செய்தனர். ஆனால் தன்னால் முடியும் என டிக்கட் 2 பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று நேரடி பைனலிஷ்டாக தேர்வானார். டைட்டிலை ரித்விகா வெற்றி பெற்ற நிலையில் 4ம் இடம் பிடித்த ஜனனி ஐயர் பின்னர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த கடந்த சில நாட்களாக PSBB பள்ளி பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கின்றது, பிராமண பள்ளி என்பதாலும் அதிகம் பிரபலமான பள்ளி என்பதாலும் மத ரீதியான பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. குறித்த பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் நடிகை ஜனனி ஐயரும் தனது பெயரை மாற்றி பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தனது பெயரின் பின்னால் உள்ள ஜாதிப் பெயரான ஐயர் என்பதை மாற்றி வெறும் ஜனனியாகி உள்ள அவர் “மாறுவோம் மாற்றுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.!!