" "" "

ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப் பட்டதன் பின்னர் காவல் நிலையத்தில் என்ன நடந்தது.? நேரில் பார்த்த பெண் காவலர் ரேவதி வாக்குமூலம்..! என்ன பேசினார் இதோ ரேவதியின் குரல் பதிவு..!!

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் மொபைல் கடை வைத்திருந்த தந்தை மகன் பொலீஸாரின் விசாரணையின் போது மரணமடைந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ள நிலையில் இவர்களின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என , ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்துடன் சம்மந்தப் பட்டவர்களை கைது செய்யக் கோரி பலரும் போராடி வருகின்றனர்.

சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என அனைவரும் சம்பந்தப் பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸுக்கு என்ன நடந்தது,? உண்மையில் கொல்லப் பட்டனரா? என்பது தொடர்பான விபரங்கள் தற்போது முழுமையாக சட்டத்திற்கு கிடைத்துள்ளது.

இதில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர் ரேவதியின் வாக்குமூலம் மிக முக்கிய ஒன்றாக கருதப் படுகின்றது. சம்பவ தினத்தன்று பணியில் இருந்த பெண் காவலர் ரேவதியிடம் நடந்த விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொலீஸார் ஜெயராஜை கொடூரமாக தாக்கியதை தடுக்க முயன்ற பென்னிக்ஸின் பின் பக்கத்தில் லத்தியால் குத்தி கிழித்தது போன்ற விடயங்கள் இங்கு பெண் காவலர் வாக்குமூலமாக கொடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது வெளியானதை தொடர்ந்து ரேவதிக்கு வாழ்த்துகள் குவிந்து வந்தாலும் கொலை மிரட்டலும் வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தனக்கும் தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் ரேவதி மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்..!!

Video Copyrights & Credits Owned by :Vikatan TV