" "" "

கர்ப்பிணி மனைவியை தன் கண்முன்னே நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர். தமிழகத்தை அதிர வைத்துள்ள சம்பவம்.!!

5 மாத கர்ப்பிணி மனைவிக்கு சத்து மாத்திரை என மயக்க மாத்திரை கொடுத்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் தொடர்பாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி எல்.ஆர் பாளையத்தை சேர்ந்தவர் ஜெயமணி, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடித்து மூன்று மாதங்கள் மட்டுமே மனைவியுடன் மகிழ்ச்சியாக இருந்த இருந்த ஜெயமணி பின்னர் அவர் போட்டிருந்த நகைகளை விற்று குடிக்க ஆரம்பித்துள்ளார்.

அதன் பின்பு தான் ஜெயமணி குடிகாரன் என்பது மனைவிக்கு தெரியவந்துள்ளது. இந்த நிலையில் 5 மாதம் கர்ப்பமாக இருந்த மனைவியிடம் சத்து மாத்திரை என மாத்திரை ஒன்றை கொடுத்த நிலையில் அவரும் குடித்துள்ளார். அப்போது ஜெயமணியின் நெருங்கிய நண்பரான சுந்தர மூர்த்தியை அழைத்து வந்து மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார்.

மயக்கத்தில் இருந்த மனைவி எழுந்து பார்த்த போது அதிர்ந்து போய் பார்த்த போது அருகில் சுந்தரமூர்த்தி நிர்வாணமாக கிடந்துள்ளார். கதறி அழுது கணவரிடம் கேட்ட போது வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதுடன் மூர்த்தியிடம் கடன் வாங்கியதால் தவறு செய்ததாகவும் மன்னிக்கும் படியும் கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். பின்னர் குழந்தை பிறந்த பின் பலமுறை நண்பர்களுடன் இருக்கும் படி கூறிய நிலையில் முடியாது என மறுத்துள்ளார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் மணிகண்டன் என்பவரை வீட்டுக்கு அழைத்து வந்த ஜெயமணி அவருடன் இருக்கும் படி கூறியதுடன் அப்படி செய்யாவிட்டால் குழந்தையை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மனைவி குழந்தையுடன் பொலீஸ் நிலையம் வந்ததுடன் தனது குழந்தையை காப்பாற்றுமாறு கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரை விசாரித்த பொலீஸார் ஜெயமணியை கைது செய்துள்ளனர். இந்த லாக் டவுன் காலத்திலும் உச்சக் கட்ட போதையில் இருந்துள்ளார் ஜெயமணி. பொலீஸார்வ விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.!