" "" "

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வீட்டில் இருந்த 32721 பொருட்களின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது..! இதோ முழு விபரம்..!!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் “வேதா நிலையம் வீடு” அரசுடமை ஆக்கப் பட்டதை தொடர்ந்து வீட்டில் உள்ள அனைத்து சொத்துக்களின் விபரம் வெளியாகி உள்ளது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இது தொடர்பாக தெரிய வருவதாவது முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வீடு அரசுடமை ஆனதை தொடர்ந்து வீட்டில் இருந்த அசையும் சொத்துக்கள், மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் அதிகாரிகளால் கணக்கிடப் பட்டு பட்டியலிடப் பட்டன.

அதில் செல்வி ஜெயலலிதாவிற்கு சொந்தமான 4 கிலோ & 372 கிராம் தங்கம் 14 பொருட்களாக கிடைத்துள்ளது. அதே போல் 601 கிலோ & 424 கிராம் வெள்ளி 867 பொருட்களாக கிடைத்துள்ளது. அத்துடன் சிறிய வகை வெள்ளி பொருட்கள் 167 கிடைத்துள்ளது. தொலைகாட்சிகள் 11.

குளிர் சாதனப் பெட்டிகள் 10, ஏ/சி 38, சமையலறை மரத் தளபாடங்கள் 556, சமையலறை பொருட்கள் 6514, உட்பட சுமார் 32721 பொருட்கள் போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்ததாக அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது. இதன் முழு விபரம் கீழே உள்ள பட்டியலில் உள்ளது..!!