" "" "

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்..! அதிர வைத்த பிரேத பரிசோதனை அறிக்கை..!

தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் மக்கள் மத்தியில் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலீஸார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதாக சற்று முன்னர் உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடியாக தெரிவித்துள்ளது. ஜெயராஜ், மற்றும் பென்னிக்ஸின் பிரேத பரிசோதனையில் அவர்களின் உடலில் ஏராளமான காயங்கள் இருப்பது உறுதி படுத்தப் பட்டதை தொடர்ந்தே இந்த தகவல் வெளியாகி உள்ளது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அத்துடன் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தையை நீதிமன்றத்தில் நிறுத்திய போது நீதிபதியை பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்தது உட்பட பொலீஸார் மீது ஏற்கனவே புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் தற்போது பொலீஸாருக்கு எதிராக புகார் கொடுக்க முடியும் என்ற நீதிமன்ற உத்தரவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

பொய்யான FIR பொய்யான தகவல்கள் என பொலிஸார் செய்த அத்தனை மோசமான செயல்களும் வெளியாகி உள்ள நிலையில் குறித்த காவல் நிலைய அத்தனை காவலர்களும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

ஒரு குடும்பத்தில் இரண்டு ஆண்களின் உயிர் பிரிய காரணமாக இருந்த பொலீஸாருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் இந்த தீர்ப்பு சற்று ஆறுதல் அளிப்பதாகவும், உடனடியாக குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் படி மக்கள் கேட்டு வருகின்றனர்..!!