" "" "

நல்ல பையன் என ஊரே புகழ்ந்த 23 வயதுக்கு இளைஞனில் திடீரென ஏற்பட்ட மாற்றம்.!! என்னை கொலை செய்ய வருகிறார்கள் என கதறியபடி செய்த

என்னை அவர்கள் கொன்று விடுவார்கள், இதோ என் கண் முன் நிற்கிறார்கள் என கூறி பெற்றோர் மற்றும் சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு 23 வயது இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெயதாஸ் இவர் திருமணம் செய்து மனைவி சாலினி. மற்றும் 29 வயதான ஜெகன் மற்றும் 23 வயதான ஜேக்கப் ஆகியோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

அமைதியான குடும்பம், ஆண் பிள்ளைகள் என்பதால் மிகவும் அவதானமாக பெற்றோர் வளர்த்து வந்துள்ளனர். இவர்கள் இருந்த பகுதியில் நல்ல பிள்ளைகள் என பலராலும் பெயர் எடுத்த இவர்கள் கல்லூரி படிப்பை முடித்து வேலை செய்து வந்தனர். திடீரென கடந்த சில நாட்களாக ஜேக்கப் தாய் தந்தையிடம் தன்னை யாரோ கொலை செய்ய வருவதாக கூறி கத்தியுள்ளார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

சரியாக உறங்க முடியாமல் இரவில் தன்னை காப்பாற்றும் படி கதறியுள்ளார். அயலில் உள்ளவர்கள் கேட்ட போது பெற்றோர் ஏன் என்று தெரியவில்லை என கூறியுள்ளனர். நேற்றைய தினம் திடீரென ஜெயதாஸ் வீட்டில் கதறல் சத்தம் கேட்டுள்ளது. அயலவர்கள் சென்று பார்த்த போது ஜேக்கப் இரத்தம் சொட்ட சொட்ட மாடியில் நின்று தற்கொலை செய்ய போவதாக கூறி கீழே பாய்ந்துள்ளார்.

நொடியில் தலை சிதறிய நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். ஜேக்கப்பின் வீட்டிற்கு சென்று பார்த்த போது ஜெகதாஸ், சாலினி, ஜெகன் மூவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனடியாக மீட்டு வைத்தியசாலை அட்மிட் செய்த போதும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இறுதியாக அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் ஜேக்கப் தன்னை கொலை செய்ய யாரோ வந்துள்ளதாக கூறி கதறியுள்ளார்.

பெற்றோர் சமாதான படுத்த முயன்ற போது அவர்களுடன் சண்டை போட்டுள்ளார். இதனை ஜெகன் தடுக்க சென்ற நிலையில் கையில் இருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதனை தடுக்க சென்ற தாய் தந்தையையும் கொடூரமாக குத்தியுள்ளார்.

கொலை செய்யப் போகிறார்கள் என்றே கத்தி கத்தி மாடியில் இருந்து குதித்து இறந்துள்ளார். ஏன் இப்படி நடந்தது? வெறும் 23 வயதான ஜேக்கப் ஏன் இப்படி செய்தார் என பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.!