" "" "

கணவனின் செல்போனில் இருந்த விடயங்களை கணவருக்கு தெரியாமல் உறவினர்களுக்கு அனுப்பிய மனைவி. நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு.!!

ஜக்கிய அரபு நாட்டில் பெண் ஒருவருக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்ட சம்பவம் திருமணமான ஆண்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக திருமணமான ஆண்கள் பொக்கிஷமாக பாதுகாப்பது அவர்களின் செல்போனை தான். அதே நேரம் பெண்கள் குறிவைப்பதும் எப்படா செல்போனை கீழே வைப்பாங்க என்று தான்.

இது இரண்டும் என்றாவது நடக்கும் அந்த குடும்பம் பிரிந்து விடுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் துபாயில் கணவர் ஒருவர் தனது தொலைபேசியை வீட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ள நிலையில் மனைவி அவரது போனை எடுத்து பார்த்ததுடன் தனது கணவரின் சில தனிப்பட்ட விடயங்களை உறவினர் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இது வைரலான நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான கணவர் தனி நபர் உரிமை பறிக்கப் பட்டதாக வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த நீதிபதி தனி நபர் சுதந்திரம் மிக முக்கியமானது என கூறியதுடன் கணவரின் செல்போனை பார்த்த மனைவியை எச்சரித்ததுடன் 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் அபராத தொகை விதித்து தீர்ப்பளித்தது.!!