கால் வீக்கம் மற்றும் அடிபட்ட வலிகளால் அவதி படுகின்றீகளா..!? இதோ உங்களுக்கு உடனடி தீர்வு…!!

உடல் சோர்வாக இருந்தால் பிரண்டை சாப்பிடவேண்டும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ளது. உடம்பில் உள்ள அதிகமான நோய்களுக்கு பிரண்டை மருந்தாக உள்ளது. பிரண்டை சாப்பிடுவதால் சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் குறையும். இது வயிற்றில் உள்ள வாயுக்களை வெளியேற்றும்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

பிரண்டை துவையல் செய்து சாப்பிடும் போது அதில் உப்பு சேர்ப்பதால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்பு வலி மற்றும் வயிற்று வலி இல்லாமல் போய்விடும்.இந்த மூலிகையை ஆயுள்வேத மருத்துவத்தில் பயன்படுத்துகின்றனர். இது மூல நோய்க்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.இதில் இயற்கையாகவே கல்சியம் உள்ளதால் வயிறு சம்மந்தமான நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும்.

எலும்பு சக்தி பெறுவதோடு ஈருகளில் ஏற்படும் ரத்தகசிவை போக்கும். இதை வரத்தில் 2நாள் சாப்பிட்டால் உடல் வலுப்பெறும்.மனஅழுத்தம், செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் பிரண்டை துவையல் சாப்பிடலாம். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றவற்றை நீக்கும். துவையல் செய்து சாப்பிடுவதால் பல பலன்கள் கிடைக்கும்.

இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும், ஞாபகசக்தியை பெருக்கும், மூளை நரம்புகளை பலப்படுத்தும்.அடி பட்ட வீக்கம் நீங்க நல்லெண்ணையில் பிரண்டையை வதக்கி மிதமான சூட்டில் வீக்கத்தில் வைத்து கட்டுங்கள். வீக்கம் உடனடியாக நீங்கிவிடும்.!

துவையல் செய்யும் முறை பிரண்டைத் தண்டுகளின் மேல் தோலை அகற்ற்றி, அதில் உள்ள நாரையும் அகற்றிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்க வேண்டும். அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். பின் தேங்காய் பூ போட்டு அரைக்க வேண்டும். பிறகு, கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து போட வேண்டும். இப்போது துவையலை சாப்பிடலாம்.