கச்சதீவு திருவிழா: யாழ். செயலகத்தில் கலந்துரையாடல்; போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து விளக்கம்!

“கச்சத்தீவுத் திருவிழா எதிர்வரும் மார்ச் ஏழாம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இதுகுறித்து இன்று காலை யாழ். மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், படையினரும் முக்கிய பங்கு வகித்தனர்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்த் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன்,

“கடந்த முறைபோலவே இம்முறையும் ஒன்பதாயிரம் பேர் திருவிழாவில பங்குபற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு திருவிழாவில் இந்தியாலிலிருந்து 3,000 பேர் வருகை தந்தனர். அதேபோல இலங்கையிலிருந்து ஆறாயிரம் பேர் வருகைதந்தனர்.

இத்திருவிழாவுக்குச் செல்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருவிழாவுக்கு முதல் நாளான 6 ஆம் திகதி அதிகாலை 5 மணி தொடக்கம் மதியம் 11 மணிவரை யாழ்ப்பாணத்திலிருந்து குறிகாட்டுவான் வரை பஸ் போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, அன்று காலை 6 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை குறிகாட்டுவானிலிருந்து கச்சத்தீவுக்கான படகுகள் சேவையில் ஈடுபடும்.” எனத் தெரிவித்தார்.