" "" "

கடலில் வாழ முடியாமல் கரைக்கு வந்த கடல் பற்றி வெளியான உண்மை.! தீ பிடித்த கப்பலால் தான் இப்படி நடந்ததா.?

கடந்த வாரம் இலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று பதிவானது. சிங்கப்பூர் கப்பலான Xpress பேர்ல் நீர்கொழும்பு கடலில் தீ பிடித்தது, இதன் காரணமாக குறித்த கடல் பகுதிக்கு மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்த பிரச்சனை ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க நீர்கொழும்பு கடலில் வாழ்ந்த கடல் கன்னி அங்கு வாழ முடியாமல் கரைக்கு வந்ததாக கூறப்பட்டது.

கடல் கன்னியின் புகைப்படங்கள் வெளியானதால் அனைவரும் கடல் கன்னி என நம்பினார்கள். கடலில் கப்பல் தீ பிடித்ததால் கடலில் வாழ முடியாமல் கடல் கன்னி கரைக்கு வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் கரையில் இருந்தது கடல் கன்னி அல்ல நடிகை ஒருவர் என்பது உறுதியாக்கப் பட்டுள்ளது.

கடல் கன்னி வேடத்தில் நடிகையின் காட்சிகள் படமாக்கப் பட்ட நிலையில் அங்கு சென்ற நபர் ஒருவர் விளையாட்டாக புகைப்படம் எடுத்து வெளியிட குறித்த புகைப்படம் கடல் கன்னி என வைரலானதால் மக்கள் நம்பியுள்ளனர்.!!