கண் எரிச்சல், சிவப்பு, கண் உடனடியாக நீங்க இதனை செய்யுங்கள்…!

மனித உடல் உறுப்புக்களில் மிக முக்கியமானது கண்கள்.இதனை பாதுகாப்பது தான் இன்றிருக்கும் மிக பெரிய பிரச்சனை. காரணம் மொபைல் போன்கள், கணினி, பாவனை அதிகரித்துள்ள நிலையில் கண்களை பாதுகாப்பது என்பது மிக கடினமான ஒன்று தான். சிலரை பார்த்தால் பகல் முழுவதும் ஆப்பிஸ்களில் கணினியுடன் இருப்பார்கள்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இரவானால் மொபைல் போன் இப்படி பயன்படுத்தும் போது கண்டிப்பாக விழி திரை பாதிக்கப் படுகின்றது. இது மட்டும் காரணமாகிவிடுவதில்லை, சூழல் மாசடைதல், உடல் சூடு, உணவு பழக்க வழக்கங்கள் இவற்றால் கூட விழி திரை பாதிக்கப் படுகின்றது.

இதற்கு நாம் அன்றாடம் உணவில் கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக மதிய உணவில் கீரை வகை ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் தண்ணீர் அதிக அளவில் குடியுங்கள். தண்ணீர் குடிப்பது தான் உலகில் அத்தனை நோய்க்கும் இருக்கும் ஒரே தீர்வு.

இப்போது கண் எரிச்சல், வீக்கம் மற்றும் அரிப்புக்கு என்ன செய்வதென பார்க்கலாம்.சீமை சாமந்தி பூக்கள் நீங்கள் அறிந்திருப்பீர்கள். உலர்ந்த சீமை சாமந்தி பூக்களை ஒரு டீஸ்பூன் அளவு சுடு நீரில் போட்டு ஐந்து நிமிடம் அப்படியே வைத்துவிடுங்கள்.அதன் பின் வடித்து முகத்தை கழுவுங்கள்.

எரிச்சல், அரிப்பு இதனால் நீங்கிவிடும். விளக்கெண்ணெய் இது பற்றி நாம் ஏற்கனவே அறிந்து வைத்திருகின்றோம். கண்களுக்கு குளிர்ச்சி தருவதுடன் கண்களையும் பாதுகாக்கின்றது.அதாவது ஒரிஜினல் விளக்கெண்ணெய் ஒரு துளி.. கண்ணில் விட்டுக் கொள்ளலாம் கண் சிவப்பு, நீர் வடிதல் போன்றவை இதனால் தீரும்.