மாதம் ஒருமுறை இதனை செய்யுங்கள்… கண் திருஷ்டி உட்பட உங்கள் கஷ்டங்கள் வேகமாய் நீங்கும்..!

இன்றைய ஆன்மீகம் பகுதியில் நாம் பார்க்கப் போவது கண் திருஷ்டி. கண் திருஷ்டி ஒரு நோயல்ல அத்தனை கடினமும் அல்ல ஆனால் அதனால் தான் பல குடும்பங்கள் பாதிக்கப் பட்டிருகின்றது. பாதிக்கப் பட்டுக் கொண்டும் இருக்கிறது. உங்களுக்கு தெரியும் நாம் நன்றாக வாழ்வதை விரும்புகிறவர்களை விட நாம் கவலை பட வேண்டும் என்று விரும்புகின்றவர்களே அதிகமாக இருகின்றனர்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

ஏதாவது ஒரு வழியில் நாம் முன்னுக்கு வந்தால் எம்மை பல வழிகளில் பின்னுக்கு அனுப்பவே பலர் காத்துக் கொண்டிருப்பார்கள். எம்மை பின்னுக்கு தள்ளும் ஒன்று தான் கண் திருஷ்டி. அடி வயிற்றில் உள்ள பொறாமையால் எம் பக்கம் பார்க்கும் போது எமக்கு உடல் அலுப்பு, சோம்பேறித்தனம், அடிக்கடி உடல் வலி, தொழில் நட்டம், எவ்வளவு உழைத்தாலும் எதுவும் மிஞ்சாமல் வீண் செலவு போன்றவை நடக்கிறது.

இதற்கு நிறைய தீர்வுகள் இருந்தாலும் எளிமையான சின்ன சின்ன தீர்வுகள் உங்களுக்காக தருகின்றோம். முதலில் குழந்தைகளுக்கு. குழந்தைகள் விடாமல் அழுதுகொண்டே இருப்பார்கள். வயிறு வலி என மருந்து எடுத்தாலும் விடாமல் அழுவார்கள் அது கண் திருஷ்டி காரணமாக கூட இருக்கலாம் அதனால் ஒரு பிடி உப்பு மற்றும் மூன்று மிளகை சேர்த்து குழந்தையை சுற்றி தண்ணீரில் போட்டு விடுங்கள்.

அடுத்து கற்பூரம் மூன்று வில்லை எடுத்து அதனை குழந்தையின் உடலை துடைத்து வீட்டு வாசலில் வைத்து பற்ற வைத்து விடுங்கள். குழந்தை அழுவதை நிறுத்தி நன்றாக உறங்கும். பெரியவர்கள்: குளிக்கும் போது வாரம் ஒரு முறை குளிக்கும் நீரில் ஒரு பிடி உப்பு கலந்து குளியுங்கள்.