முதல் முதல் கவினுடனான திருமணம் பற்றி பேசிய லொஸ்லியா…! கூறியுள்ளார் பாருங்கள்…!!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் அவர்களுடைய வேலைகளில் இறங்கிவிட்டனர். சிலர் புதிய முயற்சிகளிலும் இறங்கிவிட்டனர் இந்த நிலையில் தர்சன், கவின், லொஸ்லியா ஆகியோருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்துவிட்டது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தியாவை நோக்கி இலங்கையில் இருந்து வந்த லொஸ்லியா தனது முதல் கட்ட நகர்வுகளையும் ஆரம்பித்து விட்டார். இது இப்படி இருக்க நேற்றைய தினம் முழுவதும் லொஸ்லியா தனது ரசிகர்களுக்கு மதிப்பு கொடுத்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்,

அதன் போது ரசிகர் ஒருவர் பிக் பாஸ் வீட்டிற்குள் கவினுடன் காதலில் கிசுகிசுக்கப் பட்டீர்கள் கவினை நீங்கள் திருமணம் செய்துகொள்வீர்களா என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு என் அம்மாவும் அப்பாவும் காதல் திருமணம் தான் செய்து கொண்டார்கள் , அதனால் என் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.

யாருடன் திருமணம் நடந்தாலும் அது காதல் திருமணமாக தான் இருக்கும் , அதுவும் அம்மா அப்பாவின் அனுமதியுடன் தான் திருமணம் செய்துகொள்வேன் என குறிப்பிட்டுள்ளார். இதனால் கவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்..!!