லொஸ்லியாவின் அப்பா போன்றவர்களை கொலை செய்ய வேண்டும்.! கொதிக்கும் இளைஞர்கள்… கேமரா முன் நடிக்க தெரியாத தமிழனுக்கு இந்த நிலையா.!?

கேமராக்கள் இருக்கிறது, பல கோடி மக்கள் பார்க்கிறார்கள் என்ற எண்ணம் இல்லாமல் தான் வளர்த்த மகள் தவறு செய்தால் அந்த இடத்தில் சாதாரண தந்தை ஒருவர் எப்படி நடந்துகொள்வாரோ அப்படி நடந்துகொண்டவர் தான் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் அவர்கள். இதனை டி ஆர் பிக்காக சேனல் ப்ரோமோவாக்கிய போதும் அவர் ப்ரோமோவிற்காக அப்படி நடந்துகொள்ளவில்லை.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

சாதாரண குடும்பத்தில் பிறந்த மரியநேசன் 4 பெண் பிள்ளைகளை வளர்ப்பதற்காக ட்ரைவர் தொழிலை செய்தவர். ஒரு பெண் பிள்ளை என்றாலே அடுத்த பிள்ளை ஆணாக வேண்டும் என அடம்பிடிக்கும் தந்தையார்கள் மத்தியில் 4 பெண் குழந்தைகளுக்காக எந்த வேலை என்றாலும் செய்யும் நிலையில் இருந்தவர்.

மனைவி மக்கள்களுக்கு சரியான இடத்தை அமைத்துகொடுத்த மரிய நேசன் பெண் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தனது மகிழ்ச்சியை தொலைத்து 10 வருடங்கள் கனடாவில் இருக்கிறார். மூத்த மகளின் மரணத்தின் பின் அனைத்துமே லொஸ்லியா தான் என நம்பி இருந்தவருக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் மாறியது தாங்க முடியாத வலி,

சினிமா துறை சார்ந்த குடும்பத்தில் இருந்து வந்திருந்தால் நிச்சயம் லொஸ்லியாவின் தந்தை நேற்று அப்படி செய்திருக்க மாட்டார், நடிப்பு என அவரும் கேமரா முன் நடித்திருப்பார். லொஸ்லியாவின் தந்தை செய்தது முற்றிலும் தவறு, 18 வயதிற்கு மேல் பெண்களுக்கு சுயமாக முடிவு எடுக்கும் உரிமை இருக்கிறது.
லொஸ்லியாவின் தந்தை யார் அதனை தடுக்க ? இப்படியான அப்பாக்களை கொலை செய்ய வேண்டும் என தற்போது கவின் ஆதரவாளர்கள் போர்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர்.

அப்படியானால் பெண் பிள்ளைகளை பாதுகாக்கும் அத்தனை அப்பாக்களையும் கொலை செய்ய வேண்டுமா.? அப்படியானால் 18 வயதிற்கு பின் பெண்ணை எந்த ஆண் பயன்படுத்தினாலும் அப்பாக்கள் கை கட்டி அல்லது கை கொடுத்து வேடிக்கை பார்க்க வேண்டும் !? கவினின் ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பது அதை தானா? லொஸ்லியாவின் தந்தை தனது மகளை மட்டும் தான் திட்டினார்.

கவினுக்கு மரியாதை கொடுத்தே பேசினார். அப்படி இருக்கையில் லொஸ்லியாவின் தந்தையை தரக்குறைவான வார்த்தைகளால் கவினின் ஆதரவாளர்கள் திட்டுவதும் அவரை கொலை செய்து விடுவதாக கூறுவதும் முட்டாள் தனம். இது போன்ற சிந்திக்க தெரியாத இளைஞர்கள் தான் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள். ஏனெனில் இவர்களுக்கு பெற்றவர்களின் வலி புரிவதில்லை..!!