" "" "

பெண் உறுப்பு என்றால் என்ன..!? — கயல்விழி

பறவைகள் பலவிதம் என்பது மாறி மனிதர்கள் பலவிதம் இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம் என்பதை கண்களால் பார்கின்றோம். கற்பழிப்புகள், பாலியல் சீண்டல்கள், பச்சை குழந்தைகளை கொன்று புதைத்தல் மர்ம பிரதேசங்களை சிதைத்தல் இப்படி ஏகப் பட்டவற்றை அன்றாடம் படிக்கிறோம்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இவை ஏன் நடக்கிறது.!? ஒரு சிலர் ஆண்களின் காம வெறி என்கிறார்கள். உண்மையில் ஆண்களில் இந்த வெறிக்கு காரணம் என்ன.? வீட்டில் மனைவி இருக்கிறாள், வீதியில் விபச்சாரி இருக்கிறாள் காமம் மட்டும் அவன் நோக்கம் என்றால் இவர்களில் ஒருவரை அவன் தேர்வு செய்ய முடியும்.

அப்படியானால் அவனுக்கு என்ன ? உண்மையில் இந்த ஒவ்வொரு தவறுக்கும் இப்படியான ஆண் மகனை பெற்ற தாய் பதில் கூற வேண்டும்.”எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே…அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவது அன்னை வளர்பினிலே” இது உண்மையான வரிகள்.

எந்த தாயும் தன் மகனிடம் வேறு பெண்ணை கற்பழிக்க சொல்வதில்லை. ஆனால் ஆரம்ப வளர்ப்பு அப்படி ஆகிவிடுகிறது. தங்கை வளர்ந்துவிட்டாள் அவளுடன் தூங்காதே, அக்கா மடியில் அமராதே.. தங்கையை கட்டிப் பிடிக்காதே இப்படி சொல்லி சொல்லி பிரிக்க ஆரம்பிக்கின்ற போது ஆரம்பமாகிறது முதல் வன்மம்.

பெண்ணை கட்டிப் பிடித்தால் ஏதோ நடக்கும் அது என்ன.? தெரியாமல் போகிறது. வளர்ந்த பின் திருமணம் குழந்தை வாழ்க்கை ஆனாலும் சிறுவயது எண்ணங்கள் சைக்கோவாக்கி வெறியை உண்டாக்கிவிடுகிறது. அதன் பின் தன்னை சிறுவனாக நினைத்து சிறுமியை வேட்டையாடி விடுகின்றான்.

அடுத்தது. அடுத்த வீட்டுக் காரர்களுடன் தினமும் சண்டையிடும் பெற்றோர் அவன் மகள் வீணா போகும், மகன் அப்பிடி போயிடுவான் இப்படி திட்டி தீர்க்க வன்மம் அங்கும் வருகிறது. சின்ன விடயத்திற்கும் எதிரியின் குடும்பத்தை அழிக்க வேண்டும் அதுவும் துடிக்க வைக்க வேண்டும்.

இதுவும் பிஞ்சு மனதில் வஞ்சம் நிரப்பும் பெற்றோர் தான். முதலில் வீட்டில் தாய் தன் சகோதரிகளுடன் ஆண்பிள்ளையை நெருங்க விட வேண்டும். பெண்கள் உன் அம்மா போல், அக்கா போல், தங்கை போல் தான். அவர்களிடம் வேறு ஒன்றும் இல்லை என்பதை உணர வைக்க வேண்டும்.

மாதவிடாய் உட்பட பெண்களுக்கு அதிக வலி கொடுக்கும் விடயங்களை மகனுக்கும் சொல்லி கொடுக்க வேண்டும். ஆணுக்கு பெண் எதிரியல்ல மாறாக ஆண் பெண்ணுக்கு வேலி என்பதை உணர்த்த வேண்டும். இவை அனைத்துமே உங்கள் மகனுக்கு 10 வயதாகும் முன்பு சொல்லி கொடுத்து விடுங்கள்.

அதன் பின் உங்கள் மகன் உங்களுக்கு சொல்லிக் கொடுப்பான். இது தான் ஆண் மகன். நல்ல தாயிடம் வளரும் மகனுக்கு பெண் உறுப்பு என்பது சிதைக்கப் பட கூடாத பொக்கிஷமாக தெரியும். மனைவியை கூட மிருகமாக அணுக மாட்டான். அதனால் கருவில் இருக்கும் போதே உங்கள் ஆண் குழந்தைக்கு பெண்ணின் புனிதத்தை கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விடுங்கள்..!